ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் சர்வதேச விமானங்களுக்‍கு தடை விதித்திருப்பது அவசியமற்றது - இந்த நடவடிக்கை எந்தவிதத்திலும் பலன் அளிக்‍காது என ஐ.நா. பொதுச் செயலாளர் கருத்து

Dec 2 2021 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் சர்வதேச விமானங்களுக்‍கு தடை விதித்திருப்பது முறையற்றது என்றும், அது எந்தவிதத்திலும் பலன் அளிக்‍காது எனவும் ஐ.நா. பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸிற்கு 'ஒமைக்ரான்' என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளுடன் சர்வேதச விமான சேவைக்‍கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில், நியூயார்க்‍கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் Antonio Guterres, ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் சர்வதேச விமானங்களுக்‍கு தடை விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது முறையற்றது என்றும், இது எந்தவிதத்திலும் பலன் அளிக்‍காது எனவும் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பாதிப்பை குறைக்‍க பயணத்தை அனுமதித்து, பொருளாதார பாதிப்பு இல்லாமல் பார்த்துக்‍கொள்வதுடன், இதர நடவடிக்‍கைகளையும் மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்‍கு அறிவுறுத்தியுள்ளார். பயணங்களை பாதுகாக்‍க பல்வேறு நவீன கருவிகள் உள்ளதால், அவற்றை பயன்படுத்திக்‍கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00