கானா நாட்டில் தங்க சுரங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் 17 பேர் பலி - 50க்‍கும் மேற்பட்டோர் படுகாயம்

Jan 21 2022 10:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
கானா நாட்டில், தங்கச் சுரங்கத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட வெடிபொருள் வெடித்து சிதறியதில், 17 பேர் பலியாகினர். 50-க்‍கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

மேற்கு ஆஃப்பிரிக்‍கா நாடுகளில் ஒன்றான கானாவின் Apiate என்ற இடத்தில் தனியாருக்‍குச் சொந்தமான தங்கச் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்திற்கு வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியதால், வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கிருந்த வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்‍கி 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 59 பேர் மீட்கப்பட்டு, அருகேயுள்ள மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டனர்.

இதனிடையே, கானா அதிபர் Nana Akufo-Addo தனது டுவிட்டர் பக்‍கத்தில், இது ஒரு சோகமான சம்பவம் என குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்‍கு அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்‍கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00