ஐரோப்பாவில் பனிப்போர் காலத்திய ஆபத்துகளை ரஷ்யா மீண்டும் ஏற்படுத்தியுள்ளது - அமெரிக்கா குற்றச்சாட்டு

Jan 21 2022 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐரோப்பாவில் பனிப்போர் காலத்திய ஆபத்துகளை ரஷ்யா மீண்டும் ஏற்படுத்தியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Antony Blinken குற்றம் சாட்டியுள்ளார்.

உக்ரைன் மீது படையெடுக்க அந்நாட்டு எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.

உக்ரைனின் இறையான்மையை குலைப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளிடையே ரஷ்யா பிரிவினையை ஏற்படுத்துவதாக Antony Blinken குற்றம் சாட்டினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா நடந்து கொள்வதை தொடர்ந்து அனுமதித்தால் இந்த பிராந்தியத்தில் முழு போர் வெடிக்கும் எனவும் Blinken எச்சரித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஜெனிவாவின் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Antony Blinken ஆகியோர் சந்தித்து பேசினர். இதற்காக Antony Blinken ஜெனிவாக்கு விரைந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00