100 வயது ஆனபோதிலும் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தும் முதியவர் - கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பிரேசில் நாட்டு முதியவர் அசத்தல்

Apr 22 2022 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

Author - Sonia ArunKumar

84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி, பிரேசில் நாட்டைச் சேர்ந்த நூறு வயது முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலின் Brusque நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், கடந்த 1940 ஆம் ஆண்டுகளில் சாதாரண ஊழியராக அங்கு பணியை தொடங்கிய Walter Orthmann என்பவர், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். நூறு வயதிலும் உற்சாகத்துடன் பணியாற்றும் அவர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதுபோல, ஆரோக்கியத்திலும் தீவிர கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வயிற்றுக்கு ஒவ்வாத அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்த்து வரும் Walter, தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும் தவறுவதில்லை என கூறியுள்ளார். 84 ஆண்டுகளாக வேறு நிறுவனத்திற்கு மாறாமல், ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார். கடமையாற்றுவதிலும் கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்த Walter Orthmann-ஐ, ஒட்டுமொத்த உலகமே வியப்புடன் பார்க்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00