அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்‍கை 21-ஆக உயர்வு

May 25 2022 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்‍கிக்‍ கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு பள்ளியில், 18 வயதுடைய இளைஞர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்‍கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் 19 சிறுவர்கள் 2 ஆசிரியர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்‍க அதிபர் ஜோ பைடன், துப்பாக்‍கிக்‍ கலாச்சாரத்திற்கு எதிராக நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என உறுதி அளித்துள்ளார். துப்பாக்‍கிச் சட்டத்தை தடுத்து தாமதப்படுத்தியவர்களின் செயலை ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00