போராட்டத்தில் ஈடுபட்ட மக்‍கள் தாக்‍கப்பட்ட விவகாரம் : இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணை

May 26 2022 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் அரசுக்‍கு எதிராக போராடி வந்த மக்‍கள் தாக்‍கப்பட்டது குறித்து, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‍சவிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்‍குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, ராஜபக்ச அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபக்‍ச குடும்பத்தினரே இலங்கையின் தற்போதைய வீழ்ச்சிக்‍கு காரணம் என்றும், அவர்கள் இலங்கை ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, அந்நாட்டு மக்‍கள் தொடர் போராட்டம் நடத்தினர். பல்வேறு தரப்பிலும் நெருக்கடிகள் வலுத்ததால், கடந்த 9-ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்ச, பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவர் பதவி விலகுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, அவரது ஆதரவாளர்கள், பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்திய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதனால் இலங்கையில் பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தில், ஆளும்கட்சி எம்.பி. உட்பட 8 பேர் பலியாகி நாடே போராட்டக்களமாக மாறியது. இந்நிலையில், இலங்கையில் கடந்த 9-ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக மகிந்த ராஜபக்சவிடம் சிஐடி போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. கொழும்புவில் உள்ள இல்லத்தில் மகிந்த ராஜபக்சவிடம் சிஐடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படலாம் எனக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00