இந்தியா தங்களுக்‍கு அளிப்பது நன்கொடை இல்லை, கடன் என இலங்கை பிரதமர் ரணில் விக்‍ரமசிங்கே பேச்சு - இலங்கை பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் வேதனை

Jun 23 2022 8:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா தங்களுக்‍கு அளிப்பது நன்கொடை இல்லை என்றும், கடன்களை கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும் என்றும் இலங்கை பிரதமர் திரு. ரணில் விக்‍ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இந்தநிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் திரு. ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் 31 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாக பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடனுதவி அளிக்க வேண்டும் என்று இந்திய தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் இந்தியாவாலும் தொடர்ந்து உதவி அளிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை என்றும், இந்தியாவிடம் பெற்ற கடன்களை கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும் என்றும் திரு ரணில் விக்‍ரமசிங்கே தெரிவித்தார். இலங்கை பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், நமக்‍கு முன்னால் இருக்கும் மிகத்தீவிரமான பிரச்னை இதுதான் என்றும் அவர் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00