ஜெர்மனியைச் சேர்ந்த Lufthansa விமான நிறுவனத்தின், பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் - ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

Jul 28 2022 8:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனத்தின், பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்‍கு ஆளாகினர்.

ஜெர்மனி நாட்டைத் தலைமையிடமாகக்‍ கொண்டு லுப்தான்சா விமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பணியாளர்கள் 9 புள்ளி 5 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்‍கக்‍ கோரிவருகின்றனர். ஆனால், இக்‍கோரிக்‍கையை லுப்தான்சா ஏற்காததால் இருபதாயிரத்துக்‍கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோடைக்‍காலத்தில் அதிக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக ஆயிரக்‍கணக்‍கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல லட்சக்‍கணக்‍கான பயணிகள் கடும் சிரமத்துக்‍கு ஆளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00