இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை - ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீட்டிப்பு

Jul 28 2022 8:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே அங்கு அரசியல் குழப்பங்களும் இருந்து வருகின்றன. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக மக்கள் நடத்திய மாபெரும் போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனிடையே முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறினர். ஆனால் மஹிந்த ராஜபட்ச மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபட்ச ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் தடையை ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவரது விசா காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் இருவருக்கும் எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00