போர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அமெரிக்கா, தென் கொரியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் எச்சரிக்கை

Jul 29 2022 6:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

போர் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், அமெரிக்கா, தென் கொரியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மிரட்டல் விடுத்துள்ளார்.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுதச் சோதனைகளில், வடகொரியா ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும், தனது வழக்கமான மிரட்டலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கொரிய போரின் 69வது ஆண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில பேசிய அதிபர் கிம் ஜாங் உன், நமது ராணுவம் எந்தவித சூழ்நிலையையும், சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்றார். தேவைப்பட்டால், உடனடியாக அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அமெரிக்கா, தென் கொரியா போன்றவை தொடர்ந்து நம்மை தூண்டி வேடிக்‍கை பார்ப்பதாகவும் குற்றம்சாட்டினார். இரட்டை வேடம் போடும் இந்த நாடுகள், நம்மை போர் சூழ்நிலைக்‍கு தள்ளப் பார்ப்பதாகவும், அவ்வாறு போர் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் எனவும் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00