அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று - தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு

Jul 31 2022 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜூலை 26-ம் தேதி, கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்ட பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை 30-ம் தேதி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னை மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00