உலக தலைவர்கள் மத்தியில் உக்‍ரைன் அதிபர் உரையாற்ற ஐ.நா. ஒப்புதல் : ரஷ்யா, கியூபா, வடகொரியா உள்ளிட்ட 7 நாடுகள் எதிர்ப்பு

Sep 17 2022 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக தலைவர்கள் மத்தியில் உக்‍ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலியில் உரையாற்ற ஐக்‍கிய நாடுகள் அவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஐக்‍கிய நாடுகள் அவையின் ஆண்டுக்‍கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். இந்தக்‍ கூட்டத்தில் ரஷ்யாவின் தாக்‍குதல் மற்றும் ஆக்‍கிரமிப்பு குறித்து உலக தலைவர்கள் மத்தியில் காணொலியில் உரையாற்ற உக்‍ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டமிட்டு இருந்தார். இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து வாக்‍கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் ​ஜெலன்ஸ்கி கா​ணொலியில் உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்ற 101 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 19 நாடுகள் இந்த வாக்‍கெடுப்பில் பங்கேற்கவில்லை. ரஷ்யா, கியூபா, பெலாரஸ், வட கொரியா, எரித்ரியா, சிரியா, நிகாரகுவா ஆகிய 7 நாடுகள் எதிராக வாக்‍களித்தன. இதையடுத்து, உக்‍ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலியில் உரையாற்ற ஐக்‍கிய நாடுகள் அவை ஒப்புதல் அளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00