10 நாட்கள் பொதுமக்‍கள் அஞ்சலிக்குப் பின் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம்: அரசு மரியாதையுடன் பாரம்பரிய முறைப்படி கணவர் பிலிப்பின் கல்லறை அருகில் அடக்கம்

Sep 20 2022 9:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அவர் வசித்து வந்த விண்ட்ஸர் அரண்மனையில் பாரம்பரிய சடங்குகளுக்‍கு பின்னர், அவரது கணவரின் உடலுக்‍கு அருகே நல்லடக்‍கம் செய்யப்பட்டது. இந்தியாவின் சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எலிசபெத்தின் உடலுக்‍கு அஞ்சலி செலுத்தினார்.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் ஓய்வு எடுத்துவந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், தமது 96வது வயதில் கடந்த 8ம் தேதி காலமானார். பின்னர் அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து கொண்டு வரப்பட்டது. பின்னர் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த தலைவர்களும் எலிசபெத்தின் உடலுக்‍கு அஞ்சலி செலுத்திய நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்திலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்துக்‍கு எடுத்து வரப்பட்ட அவரது உடல் பாரம்பரிய சடங்குகளுக்‍குப் பின்னர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பக்‍கிங்ஹாம் அரண்மனையைக்‍ கடந்து ஹைட் பூங்காவுக்‍கு வழியாகப் பயணப்பட்ட அவரது உடல், அங்கிருந்து அமரர் ஊர்தியில் விண்ட்ஸர் கோட்டைக்‍கு எடுத்துவரப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்துக்‍கு உலக நாடுகளில் இருந்து வந்த 500க்‍கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் பிரிட்டன் அரச குடும்பத்தினர் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்நிகழ்ச்சியில் பங்கேற்று எலிசபெத்தின் உடலுக்‍கு அஞ்சலி செலுத்தினார்.

ஊர்வலம் சென்ற பாதையில், வழிநெடுகிலும் பல லட்சக்‍கணக்‍கான பொதுமக்‍கள் சோகத்துடன் திரண்டு வந்து கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. அப்போது ராணியின் உடல் மீது அரச குடும்பத்து கொடி போர்த்தப்பட்டு, அவரது அரண்மனையில் இருந்து பறிக்கப்பட்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சவப்பெட்டி மீது, 'கோஹினுார்' வைரம் பொறிக்கப்பட்ட ராணியின் கிரீடம் மற்றும் அவரது செங்கோல் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன. அதன்பின்னர் அவரது உடல் விண்ட்சர் அரண்மனையின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, ராணியின் கணவரான இளவரசர் பிலிப் மற்றும் பெற்றோர் கல்லறைகளுக்கு அருகே ராணியின் உடல் பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், அரச குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00