ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாகச் செயல்பட்ட முக்கிய நபர் விடுவிப்பு : ரஷ்யாவின் பிடியில் இருந்து 200 வீரர்கள் மீட்பு

Sep 23 2022 8:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அதிபர் புதினுக்‍கு ஆதரவாகச் செயல்பட்ட முக்‍கிய நபரை விடுவித்துள்ள உக்‍ரைன் அரசு, அதற்குப் பதிலாக 200 வீரர்களை ரஷ்யாவின் பிடியில் இருந்து மீட்டுள்ளது.

உக்‍ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. நேட்டோ கூட்டமைப்பில் ​உக்‍ரைன் சேர எதிர்ப்புத் தெரிவித்து இந்த போர் தொடுக்‍கப்பட்டது. இந்நிலையில், போரில் ஈடுபட்ட ரஷ்யா மற்றும் உக்‍ரைன் ராணுவத்தினர்களை இரு நாடுகளும் கைது செய்துவைத்துள்ளன. இதே போல் உக்‍ரைன் நாட்டின் டொனெட்ஸ்க்‍ பகுதியில் இருந்து ரஷ்யாவுக்‍கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அமைப்பின் தலைவர்களையும் உக்‍ரைன் அரசு கைது செய்து வைத்துள்ளது. இதில் முக்‍கிய நபரான விக்‍டர் மெத்வெக்‍ச்சக்‍ என்பவரை விடுவிக்‍க உக்‍ரைன் அரசை ரஷ்யா வலியுறுத்திவந்தது. இதற்காக உக்‍ரைன் நாட்டு வீரர்கள் 50 பேரை விடுவிப்பதாகவும் உறுதியளித்திருந்தது. ஆனால் 200 வீரர்களை விடுவித்தால் மட்டுமே விக்‍டர் மெத்வெக்‍ச்சக்கை விடுவிக்‍க முடியும் என உக்‍ரைன் அறிவித்தது. இதே போல் மேலும் சிலரை விடுவிக்‍க ரஷ்யா மொத்தமாக 215 உக்‍ரைன் வீரர்களை விடுவிக்‍கவும் கோரிக்‍கை விடுக்‍கப்பட்டது. அதனடிப்படையில் இருநாடுகளும் இணைந்து போர் மற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக்‍ கைது செய்தவர்களை விடுவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00