அமெரிக்‍காவின் தேசிய கடன் சுமை தொடர்ந்து அதிகரிப்பு - ஒவ்வொரு தனி நபருக்‍கும் 65 லட்சம் ரூபாய்க்‍கும் அதிகமான கடன்சுமை

Oct 6 2022 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவின் தேசிய கடன் சுமை 31 லட்சம் கோடி டாலருக்‍கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்‍கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்‍காவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் போராட்டத்தில் சிக்‍கித் தவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது நாட்டின் மொத்த கடன் சுமை 31 புள்ளி ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக அந்நாட்டில் ஆட்சி புரியும் அரசுகள் பொதுமக்‍களுக்‍கு வரி விதிப்பைக்‍ குறைத்து விட்டு அரசின் செலவினங்களை அதிகரித்து வருவதே இது போன்ற பிரச்சினைக்‍குக்‍ காரணம் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில், அமெரிக்‍காவில் வசிக்‍கும் ஒவ்வொரு தனிநபருக்‍கும் சுமார் 65 லட்சம் ரூபாய்க்‍கும் அதிகமான கடன் சுமை இருப்பதாகவும், இது மேலும் அதிகரிக்‍கும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற நிலை தொடர்ந்தால், அது உலக அளவில் பொருளாதார பாதிப்புக்‍களை ஏற்படுத்தும் ஆபத்து இதுப்பதாகவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00