சீனாவில் தொடர்ந்து சரிந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் : வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டு சொத்துக்கள் விலை சரிவு

Nov 21 2022 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் சரிவை சந்தித்து வருவதால், அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்களின் பார்வை இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளது.

சீனாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளி விவரங்களை சீன அரசு கடந்த வாரம் வெளியிட்டது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி தொடர்ந்து 15வது மாதமாக இந்த வீழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த ஆண்டை இதே காலத்தில் ஒப்பிடும்போது, ரியல் எஸ்டேட் தொழில் 8 புள்ளி 8 சதவிகித அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும், வணிக பயன்பாட்டுக்கான சொத்து விற்பனை 22 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அதேநேரம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் விற்பனை குறியீட்டு எண் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. சரிந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் தொழிலை தூக்கி நிறுத்தும் முயற்சியில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வரும் போதிலும், சிங்கப்பூரை அடிப்படையாக கொண்ட கேப்பிடல் லேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் வருங்காலத்தில் இந்தியா மற்றும் வியட்நாமில் முதலீடு செய்வதற்கான முயற்சிகளை தொடங்கியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00