டெஸ்லா கார்களில் பின்விளக்குகள் சரியாக எரியவில்லை எனப் புகார் : 3,21,000 கார்களை திரும்பப்பெற டெஸ்லா நிறுவனம் முடிவு

Nov 23 2022 10:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெஸ்லா கார்களின் பின்புற விளக்‍குகள் சரியாகச் செயல்படாத காரணத்தை ஒட்டி, 3 லட்சத்து 21 ஆயிரம் கார்களைத் திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சில மாடல்களைச் சேர்ந்த கார்களில் பின்விளக்‍குகள் முறையாக எரிவதில்லை என்றும், இதனால் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் ஆபத்துக்‍கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை அது போன்ற புகார்கள் எழவில்லை என்றாலும், சுமார் 3 லட்சத்து 21 ஆயிரம் கார்களில் மென்பொருட்களை அப்டேட் செய்வதன் மூலம் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போல் கடந்த சில நாட்களுக்‍கு முன் ஏர்பேக்‍ பிரச்சினை, ஸ்டியரிங் பிரச்சினை போன்ற காரணங்களால் கார்களை அந்நிறுவனம் திரும்பப் பெற்ற நிலையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 19 முறை அந்நிறுவனக்‍ கார்கள் இதுபோன்ற​ பிரச்சினைகளைச் சந்தித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00