6 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஹெச்.பி. நிறுவனம் முடிவு : 3 ஆண்டுகளுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு

Nov 23 2022 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரபல H.P. கணினி நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் 6 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களான Meta மற்றும் Amazon, ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில், H.P. கணினி நிறுவனத்தின் தலைமை நிதித்துறை அதிகாரி Marie Myers, செலவினங்களைக் குறைக்கும் வகையில், வரும் 2025-ம் நிதியாண்டு இறுதிக்குள் உலக அளவில் 6 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது, அந்நிறுவனத்தின் மொத்தப் பணியாளர் எண்ணிக்கையில் 12 சதவிகிதமாகும். Personal Computer-களின் விற்பனை வெகுவாக சரிந்து விட்டதால், ஆட‌்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், 6 ஆயிரம் பேர் வேலை இழக்க நேரிடும் என்று தெரிகிறது. எனினும், வேலை இழப்போருக்கு நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் H.P. நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00