மரபுசாரா மாட்டுத் தீவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்‍கான முயற்சி - ஆஸ்திரேலிய ஸ்டார்ட் அப் நிறுவனம் முதலீடு செய்துள்ளதற்கு வரவேற்பு

Jan 24 2023 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

புவி வெப்பமயமாவதைத் தடுக்‍கும் வகையில் மரபுசாரா மாட்டுத் தீவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தில் ஆஸ்திரேலிய ஸ்டார்ட் அப் நிறுவனம் முதலீடு செய்திருப்பதற்கு மைக்‍ரோசாஃப்ட் உரிமையாளர் பில்கேட்ஸ் ஆதரவு ​தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா, அமெரிக்‍கா உள்ளிட்ட நாடுகளில் இறைச்சிக்‍காக ஏராளமான மாடுகள் வளர்க்‍கப்படுகின்றன. ஒவ்வொரு மாட்டுப் பண்ணையிலும் ஆயிரக்‍கணக்‍கான மாடுகள் வளர்க்‍கப்படுகின்றன. இந்த மாடுகள் உண்ணும் புற்கள் மற்றும் தீவனங்களை ஜீரணம் செய்யும் போது, அவற்றின் வயிற்றில் உற்பத்தியாகும் மீத்தேன் வாயு​ காற்று மண்டலத்தில் கலந்து, கார்பனுக்‍கு அடுத்தபடியாக சூழலியல் மாற்றத்தை ஏற்படுத்​துகிறது. இதே போல் ஆடுகள் மற்றும் மான்களும் ஏராளமான மீத்தேன் வாயுவை வெளியேற்றுகின்றன. இந்நிலையில் கடலுக்‍கள் உள்ள பாசிகள் போன்ற களைகளை மாட்டுத் தீவனமாக மாற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி​த் திட்டத்தில் ஆஸ்திரேலிய ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று முதலீடு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00