ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் பெண்களின் வாழ்க்‍கை கவலையளிக்‍கும் நிலையில் உள்ளதாக ஆய்வில் தகவல்

Jan 24 2023 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் பெண்களின் வாழ்க்‍கை கவலையளிக்‍கும் நிலைக்‍குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஊடக நிறுவனம் ஆஃப்கானிஸ்தான் பெண்களை நே​ரில் சந்தித்து நடத்திய ஆய்வில் பல உண்மைகள் தெரியவந்துள்ளன. மாணவிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்‍கும் தடை விதித்த தாலிபான்கள், பெண்கள் உடற்பயிற்சி செய்வது, பூங்காக்‍களுக்‍குச் செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவும் தடை விதித்தனர். ஏற்கெனவே அந்நாட்டு மக்‍களில் 97 சதவிகிதம் பேர் வறுமையில் வாடும் நிலையில், பெண்கள் பெரும்பாலான வேலைகளுக்‍குச் செல்லவும் தடை விதிக்‍கப்பட்டிருப்பதால் அவர்களுடைய வாழ்க்‍கை கவலையளிக்கும் நிலைக்‍குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00