அணுக்‍கதிர்வீச்சு ஆபத்துள்ள சீசியம்-137 அடங்கிய சிறிய குப்பியைக்‍ காணவில்லை : 1,400 கிலோ மீட்டர் தொலைவில் தேடுதல் பணியை முடுக்‍கிவிட்டுள்ள ஆஸ்திரேலியா

Jan 28 2023 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

அணுக்‍கதிர் வீச்சு ஆபத்து மிக்‍க சீசியம் - 137 என்ற தனிமம் அடங்கிய சிறிய குப்பி தொலைந்துவிட்டதால் சுமார் ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு தேடுதல் பணியை ஆஸ்திரேலியா விரிவுபடுத்தியுள்ளது. சுரங்கத் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் சீசியம் - 137 என்ற தனிமம் அடங்கிய குப்பி ஒன்று கடந்த பத்தாம் தேதியிலிருந்து 16ம் தேதிக்‍குள் தொலைந்து விட்டதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் நியூமேன் என்ற இடத்திலிருந்து பெர்த் நகருக்‍கு கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட போது தொலைந்து போன இந்த குப்பி ஒரு ​சென்டி மீட்டர் உயரம் மற்றும் ஒரு சென்டி மீட்டர் சுற்றளவுக்‍கும் குறைவாக இருக்‍கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த குப்பி அனைவரையும் கவர்ந்திழுக்‍கும் வகையில் இருப்பதால் அதைப் பொதுமக்‍கள் யாராவது ஆர்வத்தின் காரணமாக வீட்டுக்‍கு எடுத்துச் சென்றுவிடுவார்கள் என அஞ்சப்படுகிறது. எனவே இது போன்ற பொருளை யாராவது பார்த்தால் உடனடியாக காவல் நிலையத்துக்‍கு தகவல் அளிக்‍குமாறு ஆஸ்திரேலியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00