நடப்பு ஆண்டுக்கான H1-B விசா வழங்கும் நடைமுறைகள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்குமென அமெரிக்க குடியுரிமை அமைப்பு அறிவிப்பு - தொழில்நுட்பம், மருத்துவத்துறை பணியாளர்கள் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்குவதற்கு ஏற்பாடு

Jan 30 2023 10:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே 2023-24 நிதியாண்டுக்கான H-1B விசாவுக்கான விண்ணப்பம் வரும் மார்ச் 1 அன்று தொடங்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

H-1B விசாக்கள் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற சிறப்புத் துறைகளில் ஆறு ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்றவும், வாழவும் அனுமதிக்கின்றன. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு எடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த விசாவைத்தான் நம்பியுள்ளன. இந்தநிலையில்தான் நடப்பாண்டுக்கான H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 1 முதல் மார்ச் 17 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 85 ஆயிரம் H-1B விசாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில் அதில் 65 ஆயிரம் விசாக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00