சீனாவில் ஸின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தகவல்
Jan 30 2023 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் Xinjiang மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளி ஒன்று ஆக பதிவானது. வடமேற்கு சீனாவில் மலைப்பகுதிகளை கொண்ட Xinjiang உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் மின் கட்டமைப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மையங்களில் நிலநடுக்கம் காரணமாக எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலர் நகரில் இருந்து 105 கிலோ மீட்டர் தொலைவில் ஆளில்லாத பகுதியில் 50 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் குறிப்பிட்டதாக சீன அரசின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.