ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு எஃப். 16 ஜெட் ரக போர் விமானங்கள் அனுப்பப்படுமா? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்ட மறுப்பு
Jan 31 2023 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு எஃப். 16 ரக அதிநவீன ஜெட் விமானத்தை அமெரிக்கா அனுப்பாது என அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. இரு நாடுகள் இடையே போர் தொடங்கியபோது, ரஷ்யாவின் கை ஓங்கியிருந்த நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி அளித்தன. தற்போதும் அளித்து வருகின்றன. இதனால், உக்ரைன் பலம் அடைந்து வருகிறது. இதனிடையே, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா எஃப். 16 ரக அதிநவீன ஜெட் விமானத்தை அனுப்பவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவலை அதிபர் ஜோ பைடன் மறுத்துள்ளார்.