அச்சமின்றி ராட்சத மலைப்பாம்புகளை வளர்க்கும் நபர் - பாம்புகளின் வால்களைப் பிடித்திருக்கும் வீடியோ வைரல்
Mar 16 2023 10:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இரண்டு ராட்சத மலைப்பாம்புகளின் வால்களை ஒருவர் பிடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்க யூடியூபரும் ரெப்டைல் ஜூ ப்ரீஹிஸ்டோரிக் இன்க். நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜே ப்ரூவர், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் இரண்டு பெரிய மலைப் பாம்புகளின் வால்களை தனது கைகளால் பிடித்து வைத்துள்ளார். ஒரு மலைப்பாம்பு வெள்ளை நிறத்திலும் மற்றொன்று கருப்பு நிறத்திலும் பார்ப்பதற்கே பயமுறுத்தும் வகையில் உள்ளன. இந்த வீடியோஇதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்துள்ளது.