வடகொரிய அதிபர் பற்றி இணையத்தில் தேடியவருக்‍கு மரண தண்டனை : கிம் ஜாங்கை பற்றி தேடிய உளவுத்துறை அதிகாரியை கொல்ல உத்தரவு

Mar 16 2023 2:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியாவில், அதிபர் கிம் ஜாங்கைப் பற்றி இணையதளத்தில் தேடிய உளவுத்துறை அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் வெளியுலகம் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு சினிமா, நாடகங்கள் உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் கிடையாது. குறிப்பாக அங்கு பொதுமக்கள் இணையத்தை பயன்படுத்த அனுமதி இல்லை. அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளுக்கு மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி உள்ளது. அப்படி இணையத்தை பயன்படுத்துவர்கள் குறித்து கண்காணிக்‍க குழுவும் உள்ளது. அந்த வகையில், அண்மையில் அதிபருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் அவரை பற்றிய தகவல்களை `பியூரோ 10' என அழைக்கப்படும் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இணையத்தில் தேடியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த அதிபர் கிம் ஜாங் உன், அவருக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00