தென்கொரியாவில் திருமண எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி : உலகளவில் பிறப்பு விகிதமும் தென்கொரியாவில் மிகவும் குறைந்தது
Mar 16 2023 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவில் திருமணம் செய்துகொள்வோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பிறப்பு விகிதமும் உலகிலேயே தென்கொரியாவில் மிகவும் குறைந்துள்ளது. 2021-ம் ஆண்டில், ஆயிரம் நபர்களில் திருமணம் செய்துகொள்வோர் எண்ணிக்கை 3 புள்ளி 8-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 3 புள்ளி 7-ஆக சரிந்துள்ளது. தென்கொரியாவில் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில், 2022-ல் சுமார் 1 லட்சத்து 91 ஆயிரத்து 700 திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட பூஜ்ஜியம் புள்ளி 4 சதவீதம் குறைவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.