நேபாள பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது : முகப்பு படம், சுயவிவரங்களை மாற்றிய ஹேக்கர்கள்
Mar 16 2023 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. பிரதமர் புஷ்ப கமல் தஹாலின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் அதிகாலை ஹேக் செய்யப்பட்டு, அதிலிருந்த அவரது புகைப்படம், சுயவிவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மாற்றப்பட்டிருந்தன. பிரதமரின் ட்விட்டர் கணக்கில் பிளர் என்ற பெயரில் முகப்பு படம் வைக்கப்பட்டு வர்த்தக ரீதியிலான கணக்கு போல மாற்றப்பட்டிருந்தது. இதையடுத்து உடனடியாக ட்விட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. அதன் பிறகு முகப்பு படம். "பிரதம மந்திரி அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழு, நேபாள அரசு" என சுய விவரம் உள்ளிட்ட தகவல்கள் மாற்றப்பட்டன. மீட்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் ஏற்கனவே இருந்த ட்வீட்கள் எதுவும் இல்லை. சுமார் 7 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்த நேபாள பிரதமரின் ட்விட்டர் கணக்கில் தற்போது ஆயிரத்து 13 பாலோவர்கள் மட்டுமே உள்ளனர்.