2 ஆண்டு கால தடைக்குப் பின் மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரம்ப் : "I Am Back" என அசத்தல் பதிவுடன் மீண்டும் களமிறங்கிய ட்ரம்ப்
Mar 18 2023 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2 ஆண்டு கால தடைக்குப் பின் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் கணக்குகளில் பதிவுகளைத் தொடங்கியுள்ளார். 2016 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வெற்றி உரை ஆற்றிய 12 வினாடி வீடியோ தொகுப்போடு, "I Am Back" எனப் பதிவிட்டுள்ளார். மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் ஃபேஸ்புக்கில் தன்னை பின்தொடரும் 34 மில்லியன் பேருக்கும் 2 புள்ளி 6 மில்லியன் யூடியூப் சந்தாதாரர்களுக்கும் எந்த செய்தியையையும் தெரிவிக்க முடியாமல் டிரம்ப் சிரமப்பட்டு வந்த நிலையில் அவருக்கு தற்போது அதற்கான தளங்கள் மீண்டும் திறந்துள்ளன.