உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த ஜிம்பாப்வே... சுவிட்சர்லாந்து முதலிடம் - இந்தியாவுக்கு 103வது இடம்
May 25 2023 10:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே நாடு கடைசி இடத்தை பிடித்துள்ளது. புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே வெளியிட்டு வரும் வருடாந்திர பட்டியலில், மிகவும் பரிதாபகரமான நாடாக ஜிம்பாப்வே உருவெடுத்துள்ளது. உக்ரைன், சிரியா மற்றும் சூடான் போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளை விட பணவீக்கத்தால் அந்நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக ஸ்டீவ் ஹான்கே ட்வீட் செய்துள்ளார். வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா நாடுகள் முதல் 15 இடங்களில் உள்ளன. மகிழ்ச்சியான நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், குவைத் இரண்டாவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து அயர்லாந்து, ஜப்பான், மலேசியா, தைவான், நைஜர், தாய்லாந்து, டோகோ மற்றும் மால்டா நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 103 வது இடத்தில் உள்ளது.