மணிக்கு 321 கி.மீ. வேகத்தில் சென்ற ஜப்பானிய மின்சார கார் : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 'OWL' கார்
May 25 2023 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மின்சார கார் ஒன்று அதிவேகமாக சென்று புதிய சாதனையை படைத்துள்ளது. ஜப்பானிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான அஸ்பெர்க், OWL என்ற மின்சார காரை தயாரித்துள்ளது. கின்னஸ் சாதனை முயற்சிக்காக இந்த காரின் சோதனை ஓட்டம் இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. இதில் இந்த கார் மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று புதிய சாதனை படைத்தது. இதனுடன் 1.72 விநாடிகளில் 96 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 2 கின்னஸ் சாதனைகளை இந்த கார் படைத்துள்ளது. இந்த கார் இந்திய ரூபாய் மதிப்பில் 22 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.