ஆஸ்திரேலியாவில் தமிழ் சங்க விழாவையொட்டி தொடங்கிய மலர் கண்காட்சி : தமிழ் சமூக மக்கள் மட்டுமின்றி பல்வேறு மொழி பேசும் மக்களும் ஏராளமாக பங்கேற்பு
Sep 17 2023 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் மலர் கண்காட்சி, குடும்ப விழா மற்றும் பேரணி என தமிழ் சங்க விழா களைகட்டியது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்து மாநிலம் தூவூம்பா நகரில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி வெகுசிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கிய மலர் கண்காட்சி மற்றும் பேரணியில் தூவூம்பா தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் சமூக மக்கள் மட்டுமின்றி பல்வேறு மொழி பேசும் மக்களும் ஏராளமாக கலந்து கொண்டனர். வண்ண வண்ண பூக்கள் பூத்துக்குலுங்கிய இந்த கண்காட்சியில் தமிழ் சமூக மக்களின் பிறந்த நாள், திருமணநாள் விழா என குடும்ப விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். கடல் கடந்த தமிழ் மக்களின் இந்த விழா காண்போரை வியக்க வைத்தது.