ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை : ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பங்களை பரிமாறி கொள்ள முடிவு
Sep 17 2023 6:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அணுசக்தி திறன் கொண்ட குண்டுகள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் போர் கப்பல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இரு நாடுகளிடையே பாதுகாப்பு ரீதியிலான வலுவான கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷெர்ஜி சொய்குவுடன், கிம் ஜாங் உன் பேச்சுவார்த்தை நடத்தினார். வ்லாடிவோஸ்டோக் நகருக்கு அருகே உள்ள கினெவிச்சி விமான படை தளத்தில் ரஷ்யாவின் அணுசக்தி திறன் கொண்ட குண்டுகள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் மற்றும் போர் கப்பல்களை ஷெர்ஜி சொய்குவும், கிம் ஜாங் உன்னும் இணைந்து பார்வையிட்ட பின் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பங்களை பரிமாறி கொள்ள இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்...