அமெரிக்க அதிபரானால் H1-B விசா ரத்து செய்யப்படும் - குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி பிரச்சாரம்
Sep 18 2023 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க ஹெச்-1பி விசாவால் 29 முறை பயனடைந்த விவேக் ராமசாமி இப்போது அதனை எதிர்ப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடப் போவதாக கூறி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, தான் வெற்றி பெற்றால் ஹெச்-1பி விசாவை ரத்து செய்வேன் எனக் கூறியுள்ளார். 2018 முதல் அவரது முன்னாள் நிறுவனமான ரொய்வான்ட் சர்வீசஸ்க்கு இந்தியாவிலிருந்து பணியாளர்களை 29 முறை அமெரிக்காவிற்கு அழைத்து வர ஹெச்-1பி விசாவை பயன்படுத்திய அவர் தற்போது இப்படிக் கூறியதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.