உலக சுகாதார அமைப்பு, செஞ்சிலுவை சங்கத்திடம் முறையிடும் இஸ்ரேல் : போருக்கு நடுவே சுவிட்சர்லாந்து செல்லும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்
Nov 14 2023 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போருக்கு நடுவே இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் சுவிட்சர்லாந்திற்குச் சென்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மற்றும் செஞ்சிலுவை சங்கத் தலைவர் ஆகியோரை சந்திக்க உள்ளார். காசாவில் ஹமாஸ் போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட சுமார் 240 பணயக்கைதிகளை விடுவிக்கும் சர்வதேச முயற்சி குறித்து அவர் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பணயக்கைதிகளை விடுவிக்காமல் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கக்கூடாது என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் எலி கோஹன் வலியுறுத்துவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.