எந்த நேரத்திலும் எரிமலைகள் வெடிக்கும் அபாயத்தில் ஐஸ்லாந்து : சாலைகளில் விரிசல் விழுந்து நீராவி வெளியேறுவதால் அச்சம்
Nov 14 2023 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்ட ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஐஸ்லாந்து நாட்டில், 14 மணி நேரத்தில் 800 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இந்நிலையில் அங்கு சுமார் 33 எரிமலைகள் உள்ளதால் அவை வெடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்தநிலையில், கிரிண்டாவிக் நகரில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லும் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. எரிமலைகள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்பதை காட்டும் வகையில் விரிசல் விழுந்த சாலைகளில் இருந்து நீராவி வெளியேறி வருவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.