பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற்றம் : பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி கண்டனம்
Nov 15 2023 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் அகதிகள் பெருமளவில் வெளியேற்றப்பட்டதற்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதரும், நடிகையுமான ஏஞ்சலினா ஜோலி ஆழ்ந்த கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், ஆப்கானிஸ்தானில் உயிர்வாழ்வதற்கான கடினமான யதார்த்தத்தை எதிர்கொண்டு, பாதிக்கப்படக்கூடிய ஆப்கானிய குடும்பங்களை திருப்பி அனுப்பும் எதிர்பாராத முடிவிற்கு பாகிஸ்தானை ஏஞ்சலினா ஜோலி கடுமையாக சாடினார். ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலில் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன என்றும் பலர் சிறையை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற நேரத்தில் பாகிஸ்தான் நடந்து கொள்வது கணடனத்திற்குரியது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.