ஹாங்காங்கில் மூட்டைப்பூச்சிகள் படையெடுத்து வருவதால் பீதியில் உறைந்திருக்கும் மக்கள் : பூச்சிக்கொல்லிப் பொருட்களின் விற்பனை 172 மடங்காக அதிகரிப்பு
Nov 15 2023 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹாங்காங்கில் மூட்டைப்பூச்சிகள் படையெடுத்து வருவதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். இரவுநேரத்தில் ரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப்பூச்சிகள் ஒரே நேரத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்வதால் அவை நாடு முழுவதும் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம், ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் மூட்டைப்பூச்சிகள் காணப்பட்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது. தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளின் பைகள் மற்றும் பெட்டிகளில் மூட்டைப்பூச்சிகள் ஒட்டிக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் மூட்டைப்பூச்சிகள் படையெடுத்து வருவதால் பூச்சிக்கொல்லி மருந்தை வாங்க மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் ஹாங்காங்கில் பூச்சிகளைக் கொல்லும் பொருட்களின் விற்பனை 172 மடங்கு அதிகரித்துள்ளது.