ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் வீட்டின் மீது குண்டுவீசிய இஸ்ரேல் ராணுவம் : குண்டுவீச்சில் உயிர் தப்பினாரா அரசியல் பிரிவு தலைவர்?
Nov 16 2023 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் இல்லம் இஸ்ரேல் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டது. ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக பதவி வகித்து வரும் இஸ்மாயில் ஹனியே, பல்வேறு நாடுகளுக்கு சென்று ஹமாஸ் இயக்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளார். காசாவில் உள்ள அவரது வீட்டில் ஹமாஸ் இயக்க முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்துள்ள ராணுவம், ஹனியேவின் விட்டை தகர்த்த வீடியோவை வெளியிட்டது. எனினும் இந்த தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டாரா அல்லது உயிர் தப்பினாரா என்ற தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.