சீனாவில் நிலக்கரி சுரங்க அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து : தீயில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு - 51 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்
Nov 16 2023 4:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் நிலக்கரி சுரங்க அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். 51 பேர் காயமடைந்துள்ளனர். ஷான்ஜி மாகாணம், லியூலியாங் நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க கம்பெனி இயங்கி வருகிறது. 4 தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலையில் வழக்கம்போல் பணியாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென மற்ற கட்டிடங்களுக்கும் பரவியது. இதில் ஏராளமானவர்கள் சிக்கிக்கொண்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 51 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.