இன்ஸ்டாகிராமில் வரும் புதிய அப்டேட்டால் பயனர்கள் மகிழ்ச்சி : நெங்கிய நண்பர்கள் மட்டும் போட்டோ, ரீல்ஸ் பார்க்கும் வகையில் புதிய அம்சம்
Nov 16 2023 7:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் போஸ்ட்டுகளை நெருங்கிய நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி புதிய அப்டேட் வெளியாக உள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஸ்டோரிக்கு இருப்பதை போல ரீல்ஸ் மற்றும் போட்டுகளுக்கும் நெருங்கிய நண்பர்கள் அம்சத்தை கொண்டு வர மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பயனர்கள் பதிவிடும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றும், இந்த புதிய அப்டேட் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.