சீன அதிபரை சர்வாதிகாரி என விமர்சித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் : அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் முகம்சுழித்த வீடியோ வைரல்
Nov 17 2023 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன அதிபரை சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் விமர்சிக்கும்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் முகம்சுளித்த வீடியோ வைரலாகிறது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்தோ-பசபிக் பொருளாதார உச்சிமாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். இதில், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபரை கம்யூனிச நாட்டை வழிநடத்தும் ஒரு சர்வாதிகாரி என குறிப்பிட்டார். அப்போது, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன், சங்கடமாக முகம்சுளித்தார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிறது.