அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்கள் : எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டது இஸ்ரேல் பாதுகாப்புப் படை
Nov 17 2023 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஸா அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் டன் கணக்கில் ஆயுதங்களை பதுக்கிவைத்திருக்கும் வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது. மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஐநா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் ஃபிளாக் ஜாக்கெட்டுகளை கைப்பற்றிய வீடியோவை இஸ்ரேல் ராணுவம் பகிர்ந்துள்ளது. அத்துடன் அல் ஷிஃபா மருத்துவமனையின் சுரங்கப்பாதைகளையும் புல்டோசர்களைக் கொண்டு இஸ்ரேல் வீரர்கள் இடித்து வருகின்றனர்.