காசா மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தேடுதல் வேட்டையால் விபரீதம் : பெண்கள், குழந்தைகள் உயிரிழந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தகவல்
Nov 17 2023 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காசா மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதால் சிகிச்சைக்கு வழியில்லாமல் ஆபத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம், ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா, ஹமாஸ் போராளிகள் உள்ளனரா என அங்குள்ள மருத்துவமனைகளை குறிவைத்து தேடி வருகிறது. குறிப்பாக அல் ஷிபா, அல் குத்ஸ், ஜெனின் மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. தேடுதலின்போது மருத்துவர்கள், பணியாளர்களை வெளியேற்றுவதால் குழந்தைகள், பெண்கள் என ஏராமானவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.