இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை - 5 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக வெளியான தகவலுக்கு அமெரிக்கா மறுப்பு
Nov 19 2023 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதங்களாக ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் ஐந்து நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கத்தாரின் தரகு ஒப்பந்தம் எட்டப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் சனிக்கிழமை இரவு அறிவித்தது. ஆனால் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், இன்னும் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும் ஆனால் ஒப்பந்தத்தைப் பெற அமெரிக்கா முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.