இஸ்ரேல் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை : ஹமாஸ் அமைப்பு மூத்த தலைவர்களின் இல்லங்களில் சோதனை
Nov 20 2023 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் ராணுவத்தினர் காஸா நகரான கான்யூனிசில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களின் இல்லங்களில் அதிரடி சோதனை நடத்தினர். காஸா மற்றும் ஹிஸ்புல்லா பகுதிகளில் அதிரடியாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தின் அதிரடி சோதனை குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் இயக்க மூத்த தலைவர்கள் குடியிருப்புகளில் பதுங்கி இருப்பார்கள் என தாம் நம்பவில்லை என குறிப்பிட்டார். இருந்தாலும், அவர்களை விரைவில் தங்களது படையினர் கைது செய்வார்கள் என்று தெரிவித்தார்.
இதனிடையே, காஸாவில் உள்ள அல்ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 2 ஆயிரத்து 500 பேர் வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பிரசவ காலத்துக்கு முன்பே பிறந்த 30 குழந்தைகள் எகிப்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.