இங்கிலாந்தில் 16 வயது இளைஞர் தாக்கியதில் 82 வயதான முதியவர் உயிரிழப்பு : முதியவரை இளைஞர் தாக்கும் அதிர்ச்சிக் காட்சிகள்
Nov 20 2023 4:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்தில் 82 வயதான முன்னாள் ராணுவ வீரரை, இளைஞர் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகி உள்ளன.
2021ஆம் ஆண்டு டெர்பி பேருந்து நிலையத்தில் உமர் மௌமேச் என்ற 16 வயதான இளைஞருக்கும், 82 வயதான டென்னிஸ் கிளார்க் என்பவருக்கும் இடையே நகரும் படிக்கட்டில் ஏறுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த முதியவரை பின்தொடர்ந்து சென்ற உமர், முதியவரை தாக்கியுள்ளால். இதில் முதியவர் தரையில் விழுந்ததில் அவரது மண்டை உடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இறந்தார். இதுதொடர்பான வழக்கில், உமர் மௌமேச்சுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவரை இளைஞர் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.