2021-22-ம் ஆண்டுகளில் உலக அளவில் தட்டம்மை இறப்புகள் 43 சதவீதம் அதிகரிப்பு - தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைந்ததே காரணம் என உலக சுகாதார அமைப்பு அறிக்கை
Nov 21 2023 10:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைந்ததால் 2021 முதல் 2022 வரை உலகளாவிய அளவில் தட்டம்மை இறப்புகள் 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், 2021-ல் 22 நாடுகளிலும், 2022-ல் 37 நாடுகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைந்ததால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. இதில், 28 நாடுகள் ஆப்பிரிக்காவையும், 6 நாடுகள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியையும், 2 நாடுகள் தென்கிழக்கு ஆசியாவையும், ஒரு நாடு ஐரோப்பாவையும் சார்ந்தவை என்றும் குறிப்பிட்டுள்ளது. தட்டம்மை பரவல் மற்றும் இறப்பைத் தடுக்க அவசரமாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.