சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையிலான தொடரும் மோதல் : ஐ.நா. அமைதிக் காப்பாளர் உள்பட 32 பேர் உயிரிழப்பு
Nov 21 2023 10:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நிகழ்ந்த புதிய மோதலில் கானா நாட்டைச் சேர்ந்த ஐ.நா. அமைதிக் காப்பாளர் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ராணுவம், துணை ராணுவம் இடையிலான மோதலில் இதுவரை 9 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அபைய் என்ற நிர்வாக பகுதிக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 32 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் மோதல் தொடராததால் தற்போது அந்த பகுதியில் அமைதி நிலவி வருவதாக கூறப்படுகிறது.