இஸ்ரேல் சரக்கு கப்பலை சிறைப்பிடித்த ஹைதி படையினர் : வீடியோ காட்சிகளை வெளியிட்ட ஹைதி படை
Nov 21 2023 5:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் சரக்கு கப்பலை ஹவுதி படையினர் சிறைப்பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. இஸ்ரேலி - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புகளுக்கு ஈரான் ஆதரவு படையான ஹவுதி படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் இஸ்ரேலின் கப்பல்கள் அல்லது அவர்களது கொடி பறக்க கூடிய கப்பல் செங்கடல் பகுதியில் சென்றால், அவற்றை கடத்துவோம்' என ஹவுதி படையினர் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு வந்த 'கேலக்சி லீடர்' என்ற சரக்கு கப்பலை ஹவுதி படையினர் நேற்று கடத்தினர். ஹெலிகாப்டரில் இருந்து குதித்து கப்பலை கடத்தும் வீடியோவை ஹைதி படை வெளியிட்டுள்ளது.